300 பருத்திவீரர்கள் (300 Spartan Warrior) உடலமைப்பை பெறுவது எப்படி ?
கதை சுருக்கம்: பாரசீக கொடுங்கோல் மன்னனான செர்க்சீசு கிரேக்க நாடான சுபார்டா நகர் மீது படையெடுக்கிறான். அதை எதிர்த்து சுபார்டா மன்னனான லியோனடசு தன்னுடைய 300 படைவீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு 30,000 பாரசீக படைவீரர்களை எதிர்த்து வீர மரணம் அடைகிறான். இந்த படத்தை பார்க்காதவர்கள் இருக்க முடியாது (அப்படி இருந்த போய் பாருங்க ;) .
இந்த 300 வீரர்களைக் கண்டாலே இன்னும் பல ஆயிரம் படைகள் வந்தாலும் தகர்துவார்கள் என்று நினைக்கத் தோன்றும் அத்தகைய உடல் அமைப்பை உள்ளவர்கள். உளியால் செதுக்கப்பட்ட பாறை போன்ற உடல் தோற்றம். இதில் பிரமிப்பு என்னவென்றால் ஆனைவருக்கும் ஒரே வகையான உடல் அமைப்பு பார்த்தவர்கள் "இதலாம் Graphic பா" என்று கூறியது உண்டு. ஆம் படத்தில் Graphic காட்சிகள் உண்டு ஆனால் இவர்கள் உடல் Graphic கிடையாது. இந்த உடல் 300 வீரர்களும் முழு உடற் பயிற்சியால் பெற்றது .
இவர்களை போன்ற உடல் அமைப்பை பெற யாருக்குதான் ஆசை இருக்காது. இருக்கட்டும் இதை பெறுவதும் முடியும் ஆனான் சிறு முயற்சியும் வேண்டும்.
உடற்பயிற்சிகள்:
* Pullups - 25 reps
* Deadlifts with 135lbs - 50 reps
* Push ups - 50 reps
* 24-inch Box jumps - 50 reps
* Floor wipers - 50 reps
* Single-arm Clean-and-Press with 36lbs Kettle bell - 50 reps
* Pullups - 25 reps
செய்முறை :
1. Pullups என்பது
அனைவருக்கும் தெரியும். இப் தொடர்ச்சியாக 25 முறை ஆதாவது கம்பியில்
தொங்கிய நிலை இல் இருந்து கிழே இறங்காமல் செய்ய வேண்டும்.(ஆரம்பத்தில் 25 முறை கடினமாக இருக்கும் முடிந்த அளவு செய்யவும்) 2. Deadlifts இந்த பயிற்சில் நடுத்தரமான எடையை பயன்படுத்தி செய்வது நல்லது முதுகு தேய்மானத்தை தவிர்க்கலாம் .சரியான பின் முதுகு வளைவை படத்தில் காட்டிய வாரு கவனமாக செய்ய வேண்டும்.50 முறை செய்ய வேண்டும்.(ஆரம்பத்தில் கடினமாக இருக்கும் முடிந்த அளவு செய்யவும்)

3. Push ups என்பது அனைவருக்கும் தெரியும்.இப்பயிற்சி தொடர்ச்சியாக 50 முறை செய்ய வேண்டும்.(ஆரம்பத்தில் 50 முறை கடினமாக இருக்கும் முடிந்த அளவு செய்யவும்).
4. 24-inch Box jumps இந்த பயிற்சில் உங்கள் முழங்காலுக்கு மேலாகவோ அல்லது நேராகவோ ஒரு நாற்காலியை வைத்துக்கொண்டு அதில் குதிபதே இப்பயிற்சி தொடர்ச்சியாக 50 முறை செய்ய வேண்டும்.
5. Floor wipersஇந்த பயிற்சியை படத்தில் காட்டிய வாரு தரையில் படுத்துக்கொண்டு காலை தூக்கிய வாரே இட வலது புறமாக மாற்றி மாற்றி சுழற்ற வேண்டும். 6. Kettle bell இந்த பயிற்சியை Kettle bell அல்லது dumbell யை கொண்டு செய்யலாம் படத்தில் காட்டிய வாரு செய்ய வேண்டும்.தொடர்ச்சியாக 50 முறை செய்ய வேண்டும்.
7. முடிவில் மறுபடியும் Pullups பயிற்சியை 25 முறை செய்ய வேண்டும்.
இவை அனைத்தையும் (Super Set) இடைவேளை இல்லாமல் செய்து முடிக்க வேண்டும் அப்படி இடைவேளை இருந்தால் 3 நிமிடங்களுக்கு மேல் செல்ல வேண்டாம்.
உணவு முறைகள்:
மேலும் உணவு முறைகள் மிக முக்கியம் எண்ணெய், சக்கரை மற்றும் கொழுப்பு வகைகளை ஆறவே தவிர்த்தல் வேண்டும். உணவில்பச்சை காய்கறிகள், கீரைகள்,வான்கோழி, திராட்சை,ஆப்பிள்,முட்டை,பால்,ஆடு இறைச்சி, கோழி,மீன்,முழு தானிய ரொட்டி மற்றும் காட்டு அரிசி (Brown Rice)உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.










0 பதிவை பற்றி உங்கள் கருத்து எனக்குத் தேவை:
Post a Comment