சூரிய நமஸ்காரம் செய்யும் முறை :
நிலை: 1
சூரியனைப் பார்தபடி, பாதங்களும் முழங்கால்களும் சேர்த்துப் படத்தில்
உள்ளபடி நிமிர்ந்து மார்பை சற்றே முன்னே தள்ளி, வயிற்றை உள்ளுக்குள்
இழுத்து நிற்கவும். இப்பொழுது உடல் முழுவதும் குறிப்பாக இடுப்புப் பகுதியை
விறைப்பாக வைத்து முன்னோக்கிப் பார்த்தபடி இறுத்தல் வேண்டும்.
சுவாச நிலை:
ஆழ்ந்த இயல்பான சுவாச நிலை.
இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1. மார்பு நன்றாக விரிவடையும்.
2. கைகளை இறுக்கி அழுத்துவதால் கைகள் உருண்டு தரளுகிறது.
3.பின் முதுகு இறுக்கம் பெருகிறது.
நிலை: 2
படத்தில் காட்டியவாறு இடுப்பை முடிந்த அளவு வளைத்து நிற்க வேண்டும்.
சுவாச நிலை:
கண்டிப்பாக மூச்சை நன்றாக இழுத்து நிறுத்திய பின் இந்த நிலைக்கு வரவேண்டும்.
இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.தோள்பட்டை வலிமைபெருகிறது.
2.இடுப்பு பகுதி கொழுப்புகள் கரைக்கப்படுகிறது.
3.பின் முதுகு இறுக்கம் பெற்று வலிமைபெருகிறது.
4. வயிற்பகுதி நன்கு விரிவடைவதால் வயிறு தொங்குவது தடுக்கபடுகிறது.
நிலை: 3
படத்தில் காட்டியவாறு இடுப்பை முடிந்த அளவு வளைத்து தரையை தொட முயற்சிக்கவும். கையின் முழுபகுதி தரையில் தொட்டு மூக்கு மெட்டியை தொடவேண்டும். (முடிந்த அளவு 1 அல்லது 2 முறை முயற்சிக்கவும் நாளடைவில் எளிதாகி விடும்). இந்த நிலையில் கையை எப்படி தரையை தொட்டுளிர்களோ இதே நிலையில் கை கடைசி ( நிலை:10) வரை இறுக்க வேண்டும.
சுவாச நிலை:
கண்டிப்பாக மூச்சை முழுமையாக வெளியே விட்ட பின் இந்த நிலைக்கு வரவேண்டும்.
இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.உடலின் நரம்புகள் நன்றாக இழுக்கப்படுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
2.முன்கை (four arm) 3.பின்தொடை 4.முன்தொடை 5.ஆடுதசை (calf) 6.பின்முதுகு
நிலை: 4
செய்யும் முறை:
படத்தில் காட்டியவாறு நிலை: 3 ல் இருந்து கையை எடுக்காமல் ஒருகாலை மட்டும் முடிந்த அளவு பின்னோக்கி தள்ளவேண்டும். தலையை நிமித்து வானத்தை பார்க்க வேண்டும்.
சுவாச நிலை:
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து கொண்டு இந்த நிலையை செய்யவேண்டும் (இந்த நிலையை எளிதாக செய்பவர்கள் சாதாரண மூச்சை விட்டுக்கொள்ளலாம்).
இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.வயிற்றிலிருந்து குதிக்கால் வரை உள்ள அனைத்து பிரச்சனைகளும் போக்கும்.
2.தோள்பட்டை வலிமைபெருகிறது.
3.பின்தொடை 4.முன்தொடை
நிலை: 5
படத்தில் காட்டியவாறு நிலை: 4 ல் மடிக்கப்பட்டிருக்கும் காலை மட்டும் பின்னோக்கி தள்ளவேண்டும். அடுத்து தலையை நிமித்து வானத்தை பார்க்க வேண்டும்.
சுவாச நிலை:
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி கொள்ள வேண்டும்.
இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.வயிற்றிலிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிறது.
2. தொந்தி விழுவதை தடுக்கிறது.
நிலை: 6
படத்தில் காட்டியவாறு மார்பின் மேல் முகவைக் கட்டை தொடும்படி இருக்க வேண்டும். மார்பின் அடி பாகம் தரையை தொட்டிருக்க வேண்டும். வயிறு தரையை தொடக் கூடாது.இதில் 1.கால் விரல்கள், 2.முழங்கால் முட்டிகள், 3.கைகள், 4.மார்பு, 5.மூக்கு, இவை மட்டுமே தரையை தொட்டிருக்க வேண்டும்.
சுவாச நிலை:
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி கொள்ள வேண்டும்.
இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.மார்பு நன்றாக விரிவடைகிறது. 2.தோள்பட்டை வலிமைபெருகிறது.
3.கையின் பின்புற(arm triceps)தோற்றம் அழகு பெருகிறது
4.தொந்தி விழுவதை தடுக்கிறது
நிலை:7
படத்தில் காட்டியவாறு கைகளை அழுத்தி இடுப்பின் மேல் உள்ள உடலை முடிந்த அளவு பின்னோக்கி தள்ளவும். தலையை நிமித்து வானத்தை பார்க்க வேண்டும்.
சுவாச நிலை:
ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி கொள்ள வேண்டும்.
இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.கையின் பின்புற(arm triceps)தோற்றம் அழகு பெருகிறது.
2.மார்பு நன்றாக விரிவடைகிறது.
3.வயிறு உள்ளவர்களுக்கு முக்கியப் பயிற்சி(தொந்தி விழுவதை தடுக்கிறது)
4.பின் முதுகு தோற்றம் அழகு பெருகிறது.
நிலை:8
படத்தில் காட்டியவாறு கைகளை அழுத்தி இடுப்பின் மேல் உள்ள உடலை முடிந்த அளவு மேல் நோக்கி இழுக்கவும். முழங்கால் முட்டி பார்க்க வேண்டும்.
சுவாச நிலை:
மூச்சை முழுமையாக வெளியே விட்ட பின் இந்த நிலைக்கு வரவேண்டும்.
இதனால் வலிமை பெரும் உறுப்புகள்:
1.வயிற்றிலிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிறது.
2.தோள்பட்டை வலிமைபெருகிறது. 3.பின்தொடை 4.முன்தொடை 5.ஆடுதசை (calf) வலிமைபெருகிறது.
நிலை: 9
நிலை 4 ல் காட்டி உள்ள வாரே செய்தல் வேண்டும் ஆனால் (நிலை 4)அதில் எந்த காலை பின் இழுதிர்களோ அந்த காலை இந்த நிலையில் (நிலை 9)முன் இழுக்க வேண்டும்.
சுவாச நிலை: மற்றும் இதனால் வலிமை பெரும் உறுப்புகள் நிலை 4 ல் காட்டி உள்ளவாரே.
நிலை: 10
செய்யும் முறை: சுவாச நிலை: மற்றும் இதனால் வலிமை பெரும் உறுப்புகள் நிலை 3 ல் காட்டி உள்ளவாரே.
நிலை: 11
நிலை: 12








6 பதிவை பற்றி உங்கள் கருத்து எனக்குத் தேவை:
நண்பரே "கற்போம் தளத்தில்" இட்ட பின்னூட்டத்தில் ஆனந்த விகடனுக்கு நன்றி என்று சொல்லி இருந்தீர்கள்? ஆனந்த விகடனில் கற்போம் பற்றி ஏதேனும் வந்ததா?
ஆம் நண்பரே வந்தது விகடன் வரவேற்பறை என்னும் பக்கத்தில் வந்தது...அதை பார்த்தே உங்கள் தளத்திற்கு நான் வந்தேன். ..
எந்த வாரம் நண்பரே?
மன்னிக்கவும் நண்பரே!!..சரியாக நினைவு இல்லை எப்படியும் 3 அல்லது 4 மாதங்கள் இருக்கும்..
நான் தொடர்ந்து வாசிக்கிறேன், ஆனால் எனக்கு பார்த்த நினைவு இல்லை.தேடி பார்க்கிறேன். நீங்களும் எந்த இதழ் என்று நினைவு வந்தால் சொல்லுங்கள்.
என் மின்னஞ்சல் முகவரி - admin@karpom.com
தினமும் முறையாக சூரிய நமஸ்காரம் செய்வதால் உண்டாகும் அபூர்வ பலன்கள் பற்றி நமக்குத் தெரியுமா? தெரியாது ஒரு
சிலருக்கே அதன் அருமை தெரியும்
Post a Comment