Monday, April 30, 2012

சூரிய நமஸ்காரத்தின் வலிமை



சூரிய நமஸ்காரத்தின் வலிமை:


                             "கண்கெட்ட  பிறகு  சூரிய   நமஸ்காரமா ?"  என்பது  தமிழில்
 பழமொழி.  சூரிய  நமஸ்காரம்  என்பது  நமக்கு  வார்த்தை அளவில்  தெரியும்.ஆனால் தினமும் முறையாக  சூரிய   நமஸ்காரம்  செய்வதால் உண்டாகும் அபூர்வ  பலன்கள்  பற்றி நமக்குத்   தெரியுமா? தெரியாது ஒரு 
 சிலருக்கே அதன் அருமை தெரியும்

.


                        
                        நம்  முன்னோர்கள்  காலையில்  நீர்  நிலைகளில் குளித்துமுடித்து  சூரிய  நமஸ்காரம்  செய்து  விட்டுதான்  மற்ற  வேலைகளைக் கவனிக்கத்
  தொடங்குவார்கள்.   ஆகையால்  தான்  அவர்கள்  உடல்  திடமாக ஆயுள்   நீடிக்க  பெற்று   ஆரோக்கியத்துடன்  வாழ்ந்தார்கள்.
                                   
                         இன்றும்கூட  வயதில்  பெரியவர்கள்  கிராமப்  புறங்களில்  காலையில்  குளித்துமுடித்து  சூரிய  நமஸ்காரம்  செய்வதைக்  காணலாம். அவர்களுக்கு உள்ள   ஞாபக  சக்தி   தேக  பலமும்  இப்போது  உள்ள இளைஞர்களுகக்கு கூட  இருபதில்ல.

                        நோய்கள்  வரக் காரணம்  என்ன?  உடலுக்கு சரியான பயிற்சி  இல்லாத  காரணத்தால்  நாடி கல்  போல  இறுகி  விடுகிறது.  ரத்த ஓட்டம்  சரிவர  நிகழாமல்  தடைபடுகிறது.  வாய்கால்  போன்ற  ஏதாவது  ஒரு  நீரோட்டத்தை  ஏடுத்துக்கொள்வோம்  அதை   சுத்தமாக  வைத்தால்  தான்   நீரோட்டம்  சரியாக  நடைபெரும்.  எங்காவது  தடை  ஏற்பட்டால்   தேக்கம்  உண்டாகி  அசுத்தம்  ஏற்பட்டு  நாற்றமெடுக்கும். அது  தான்  ஆரோக்கியத்துக்கு  கேடு 


                        வலிமையும், நன்மையும் :

                                 இதன்   வலிமையை  பற்றி  நாம்   பயிற்சியில்  காணலாம்..
இதன் நான்மைகளை  சொல்லிகொண்டே  போகலாம்  நண்பர்களே..

                                *  இன்று  இருக்கும்   நமது  நண்பர்கள்  பலருக்கு   தொப்பை  என்பது   ஒரு முக்கியப்   பிரச்சனையாக  உள்ளது (காரணம் BEER  குடிதான் பா...  அது இல்லாம முடியும்மா ?? ) இதை  ஆறவே  அழித்துவிடலாம்.               
                                
                               *   GYM செல்லாமலே கொழுப்பை  கரைக்கலாம், உடல்  உறுதியையும் கட்டுடலையும் பெறலாம் ( அதுக்காக six pack வைக்கமுடியாது அதை பற்றி இனி வரும் நாட்களில் பார்போம் ஆனால் தொப்பையை குறைத்தால் போதும் என்பவர்களுக்கு இது ஒன்றே போதும்..) 

                                *  சூரிய நமஸ்காரத்தினால் என்றும் இளமை.

                                *  ஜீரணக்குறையை  நீக்கும், சிறுகுடல்  பெருகுடல் நோய்கள் அகலும், மலசிக்கல்  வயிறு கல் போல இருபது, போன்றகுறைகள் நீங்கும்.

                                *  பலமில்லாத  இடுப்பு  வலிமை  பெரும், முகப்பொலிவு உண்டாகும், தோல் நோய்கள் சொறி, சிரங்கு, தேமல்  குணமாகும்.
                           
                                *  நரம்பு தளர்ச்சி குணமாகும்,  தலைசுத்தல், சுவாசக் கோளறு மற்றும் கண்நோய் நீக்கும்.
                         
                                *  யோகாசனத்தின் பாதி பலன் இதில் கிடைத்து  விடும்.

                                *  யோகாசனம் செய்வோர்  சூரிய  நமஸ்காரம்  செய்து விட்டு துடங்குவது நலம்.

                                *  GYM  செல்வோர்  பயிற்சி முடித்தோ அல்லது  தொடங்கும்போதோ  சூரிய  நமஸ்காரம்   செய்தால் தசைக்கு அதிக அலுத்தம் உண்டாகி தசை வளர்ச்சியைத் தூண்டும்.                              
                          

இனி வரும் நாட்களில்  சூரிய  நமஸ்காரம்   செய்வது  எப்படி, உணவு முறை,சூரிய  நமஸ்காரம் செய்யும்  காலங்கள், வலிமைகள் பற்றி காணலாம்.

0 பதிவை பற்றி உங்கள் கருத்து எனக்குத் தேவை:

Post a Comment