Tuesday, May 8, 2012

சூரிய நமஸ்காரம் செய்ய விரும்புவோர் கவனத்திற்கு

 நியமம்:

                       சூரிய நமஸ்காரம்  செய்ய  விரும்புவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முதிமுறைகள்.

1.  சூரிய நமஸ்காரம் 12 நிலைகளைக் கொண்டது  ஒரு நமஸ்காரம். இவ்வாறு குறைந்தது 27  நமஸ்காரங்களாவது செய்வது அனைவருக்கும் நல்லது.





2.  விருப்பமுள்ளவர்கள்   மந்திரங்களுடன்  செய்யலாம். ஒவ்வொரு நமஹ்கார  ஆரம்பத்திலும்  ஒரு மந்திரம் விதம்  27  நமஹ்காரதிற்கும்  மந்திரம் உள்ளது.  நாம் இதில் முக்கிய 12  மந்திரம் மட்டுமே  பார்த்தால் போதும்.


3.   வயதும் நமஸ்காரமும்:   

(1 x 12 = 12    1  என்பது நமஸ்காரம் (set) x 12  நிலைகள் (reps) =12 முறைகள்)
                   
     வயது            பலவீனமானவர்          சாதாரணமானவர்           பலம் உடையவர்
 
   8 முதல் 12            6 x12 = 72                           12x12 =144                           21x12 =252

  13 முதல் 18           12x12 =144                         26x12 =312                           51x12 =612  

  19 முதல் 30           21x12 =252                         51x12 =612                         108x12 =1,296

 30  வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் புதிதாக ஆரம்பிப்பவர்கள், தங்கள்  சக்திக்குத்  தகுந்தாற்போல் செய்வதே நலம்.


4.  நமஹ்காரதிற்கு  காலை நேரமே  நல்லது. வெயில் காலங்களில்   சூரியன்  உதையமாகும்  முன்னர்  காலை 5 மணி ஆரம்பித்து 6.30  மணிக்குள்ளும், மழைகாலங்களில் 6  மணி ஆரம்பித்து 7   மணிக்குள்ளும், பனிக்காலங்களில் சூரியன் உதையமாகும் போது  சுரியனுக்கு  எதிரில் செய்யலாம்.

5.  காலைக் கடன்களை முடித்துவிட்டு, பல் துலக்கிவிட்டு, குளித்து முடித்தோ செய்வது நலம் அதும் நல்லெண்ணெய் குளியல் சிறந்தது தோல் பளபளப்பாக இருக்கும்.சிலருக்கு வேர்வை அதிகமாக இருக்கும் அவர்கள் சூரிய நமஹ்காரம் செய்து விட்டு  குளிக்கலாம். 

6.  ஜாட்டி  அல்லது ஷோர்த்ஸ் (shorts )   அணிந்துகொண்டு  செய்தல் வேண்டும். மேலும்  ஏதேனும் ஒரு  பாய் அல்லது  ஜமுக்காளம் விரிப்பை  விரித்து  அதன் மேல்  நமஸ்காரம் செய்தல் வேண்டும்.
 
7. 'சிறுக கட்டிப் பெருக வாழ்' என்பது போல நமஸ்காரத்தை ஆரம்பத்தில் சிறிது சிறிதாக 11  வரை செய்யலாம் பிறகு வாரம் 3  அல்லது  4  பங்கு அதிகரித்துகொண்டே வரலாம். படிப்படியாக தான் ஆரம்பிக்க வேண்டும். பின்பு  ஒன்றுமே செய்யமுடியாமல்  போய்விடும். பலம் உள்ளவர்களுக்கும்  அதுவே ஆகும்.

8. சூரிய நமஸ்காரத்தை ஒவொரு நிலையும் சரிவர செய்ய வேண்டும் அவசரம் கூடாது, சக்திக்கு மீறியும் செய்யக்கூடாது.

9. சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கு நோய்கள் அண்டாது. ஏதேனும்  சிறு  நோய்கள் சிறு சங்கடங்கள் வந்தாலும்  கூடிய மட்டும் மருந்து  சாபிடாமல்,ஒரு நாள் உபவாசம்( உண்ணா விரதம்) நோய்கள் அகன்று விடும்.

10. இரவு சாப்பிட்டு, ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இரவில்  கண்விழித்தல் கூடாது. நிம்மதியான ஓய்வு அவசியம் 7 முதல் 8  மணி நேரம்  தூங்கலாம்.முடிந்தால்  விரைவாக தூங்கி விரைவாக எளுவது  உடல் நலத்துக்கு நல்லது.  


இனி வரும் நாட்களில் சூரிய நமஸ்காரம் செய்வது அதன் வலிமை மற்றும் மந்திரங்களை பார்ப்போம். 





 

0 பதிவை பற்றி உங்கள் கருத்து எனக்குத் தேவை:

Post a Comment